search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் பலி"

    • லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.
    • இதில் பலத்த அடிபட்ட 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பூமணி (வயது 45). இவர் தனது தாய் சரஸ்வதியை (வயது 65) அழைத்துக்கொண்டு காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள தனது உறவினரின் திருமணத்திற்கு மொபட்டில் வந்தனர்.

    பின்னர் திருமணம் முடிந்து மதியம் வீட்டுக்கு செல்வதற்காக காஞ்சிக்கோயில்-திங்களூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பூமணி ஓட்டி வர அவரது தாய் சரஸ்வதி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    இவர்கள் காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பூசம்பதி அருகே வரும்போது இவர்களுக்கு எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறினர். பலத்த அடிபட்ட பூமணி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடல்நிலை மோசமாகி விட்டதாக கூறி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் பூமணியின் உடலை பரிசோதித்து விட்டு அவரும் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோயில் போலீசார் லாரியை ஓட்டி வந்த பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் சென்றார்.
    • அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). திருமண தரகர்.

    இவர் இருசக்கர வாகனத்தில் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.

    மத்தூர், 

    திருப்பத்தூர் மாவட்டம், மேற்குவதனவாடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.

    நேற்று வழக்கம்போல கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி-காவேரிப்பட்டணம் சாலையில் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த பரமசிவத்துக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

    • தெரியாத வாகனம் திலீப்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள காரிமங்கலம் போலீஸ் சரகம் ஏ.சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் திலீப்குமார் (வயது 29). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.அப்போது பொன்னேரி என்ற இடத்தருகேயுள்ள ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திலீப்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மசந்திரம் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (37) என்பவர் ஓசூர்-பெங்களூரு சாலையில் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அவரது மனைவி மதுபாலா கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளந்தமிழன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
    • வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளந்தமிழன்(வயது30). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் மூங்கில்துறைப்பட்டு மரப்பட்டறை அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார்.
    • போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32). லாரி டிரைவர். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார். மேலேறி கிராமம் ஏரி கரையோரம் லாரி சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகன் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பலியானார்.

    விபத்தில் சிக்கிய லாரி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர். விபத்தில் பலியான முருகனின் உடல் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
    • விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலங்கட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 70). இவர் 13-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்க இன்று காலை தனது மொபட்டில் சென்றார்.

    அப்போது முத்தூர் ரோட்டில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சிவகிரியில் பழக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர் வந்து கொண்டி ருந்தார். ஆலங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மருத்துவ குழுவினர் முகத்தில் படுகாயம் அடைந்த செங்கோட்டையன் மற்றும் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் வரும் வழியி லேயே செங்கோட்டையன் இறந்து விட்டதாக கூறினர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜபாளையம் அருகே அய்யப்ப பக்தர் விபத்தில் பலியானார்.
    • சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகணேசன் (29). சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த இவர் சம்பவத்தன்று புத்தூரில் நடந்த பூஜையில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். குடல்வேலி விளக்கு அருகே வந்த போது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது. படுகாயமடைந்த சிவகணேசன் பரிதாபமாக இறந்தார். தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார்.
    • ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 4-வது வட்டம் பஞ்சாப் சாலையில் வசித்தவர் அரவிந்த். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது அனல் மின் நிலைய மனித வளத்துறை பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார். நேற்று இரவு 10-வது வட்டம் மெயின் ரோட்டில் இருந்து மெயின் பஜாருக்கு தனது மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது தானாகவே ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரவிந்தை என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக கூறினர். இறந்து போன அரவிந்துக்கு மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 20).ஆற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    வேலூர் கொசப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30-ந் தேதி கே.வி. குப்பம் அருகே உள்ள காவனூரில் வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் அன்று இரவு வேலூர் அடுத்த மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் தமிழரசன் மீது மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்‌. அவர்கள் விரைந்து வந்து தமிழரசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • விபத்தில் படுகாய மடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அண்ணா துரை (வயது 44). இவர், நேற்று காலை, கவர்கல்பட்டியில் இருந்து மேட்டுப்பட்டி பெருமா பாளையம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பா ராத விதமாக, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி முன்னே சென்ற டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாய மடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார்.
    • இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கிஷோர் (13) என்ற மகன் உள்ளார். ஆசிரியர் சுரேஷ், பள்ளி இயங்கும் இடத்திற்கு அருகே வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு தன் குடும்பத்தை பார்க்க சென்று வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீபாவளியை தனது குடும்பத்துடன் கழிக்க சொந்த ஊரான சோழம் பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    வாசுதேவனூர் அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியர் சுரேசை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    ×